கணக்குகளை முடக்குகிறது பேஸ்புக்..!!

கணக்குகளை முடக்குகிறது பேஸ்புக்..!!

Update: 2021-08-17 17:09 GMT

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் அந்த அந்த நாடுகள் திரும்ப அழைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.அதேபோல் காபூல் நகரை சேர்ந்த பொதுமக்களும் உயிருக்கு பயந்து அண்டை நாடான பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பதற்றநிலை உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு பிற நாடுகளை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தலீபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது.

Tags:    

Similar News