அமீரகத்தில் முக அடையாளத்தை பதிவு செய்யும் வசதி!

அமீரகத்தில் முக அடையாளத்தை பதிவு செய்யும் வசதி!

Update: 2021-04-08 20:38 GMT

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டையை தேசிய பாதுகாப்பு அடையாளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதை வகையில் யூ.ஏ.இ.யிலும் தேசிய டிஜிட்டல் பாதுகாப்பு அடையாள அட்டை உள்ளது.  இதை மேலும் மேம்படுத்தும் வகையில் இது குறித்து அமீரக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுத்துறை சேவைகளில் பொதுமக்கள் முக அடையாளத்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதில் சில முக்கிய துறைகளில் அடையாள ஆவணத்திற்கு பதிலாக தனிநபர்களுக்கு முக அடையாள முறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. தற்போது இந்த திட்டம் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் நடைபெறும் பணம் மற்றும் இதர ஆவண பரிமாற்றங்களுக்கு இந்த முறையை  பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்,  முறைகேட்டை தடுப்பதற்கும் இந்த முறை பயனுள்ளதாக அமையும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பெற  யூ.ஏ.இ. பாஸ்   செயலியை பதிவிறக்கம் செய்து அதில் அமீரக அடையாள அட்டையை ஒருமுறை பதிவு செய்து கொண்டால் அதில் உள்ள தகவல்கள் உறுதி செய்யப்படும். பின்னர் அதில் உள்ள பயோமெட்ரிக் பேசியல் பிங்கர்பிரின்ட் தொழில்நுட்பத்தில் முக அடையாளத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனை செய்து விட்டால் அமீரக அரசு சேவைகளில் அடையாள ஆவணங்களுக்கு பதிலாக முக அடையாளத்தை மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் நேர விரயமாவதை தடுக்கலாம் எனவும், மேலும் 130 அரசு மற்றும் 6000 பொதுத்துறை சேவைகளையும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News