சென்னை அடுத்த பெரம்பூர் கொடுங்கையூரைச் சேர்ந்த ஏழுமலை (47) என்பவர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது மகளின் புகைப்படத்தை இளைஞர் ஒருவர் தவறாக சித்தரித்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனால், எங்களது குடும்பத்தினருக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் புகைப்படங்களை உடனடியாக நீக்கி, அந்த இளைஞர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் இன்ஸ்டாகிராம் பதிவுகளை ஆய்வு செய்த கொடுங்கையூர் போலீசார்,  கவியரசு கண்ணதாசன் நகரை சேர்ந்த நிசாந்த் (21) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், நிஷாந்த், ஏழுமலையின் மகள் புகைப்படத்தை தவறாக மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது தெரிந்தது. இதனையடுத்து நிசாந்தை  கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கான காரணம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

Tags: