லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர்களை தாக்கிய போலி ஸ்பைடர் மேன்..!
லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர்களை தாக்கிய போலி ஸ்பைடர் மேன்..!
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் சமீபகாலங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கத்தி குத்து போன்றவை அதிகம் நடைபெறுகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை லண்டனில் இருக்கும் அஸ்டா கிளாபம் ஜங்ஷன் சூப்பர் மார்க்கெட்டில், இரவு நேரத்தில் ஸ்பைடர் மேன் உடையணிந்து வந்த நபர் திடீரென்று அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் மக்களை தாக்குகிறார். இதில் 6 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியில், பெண் ஊழியரை தாக்கும் அந்த நபர், அதன் பின் ஒரு இரும்பு பொருளை கொண்டு அடிக்கிறார். இதில், 5 பேர் லண்டன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் சரியாக உள்ளூர் நேரப்படி இரவு 10.40 மணிக்கு நடந்துள்ளது. இது எதனால் நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் இணையவாசி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்த வீடியோவை பதிவிட்டு, அதில், அஸ்டா கிளாபம் சூப்பர் மார்க்கெட்டில், முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் தாக்கும் நபர் என்று குறிப்பிட்டுள்ளார்.
A thug attacks asda workers at a store in London 😱 hitting women smh 🤦🏾♂️ #spiderman #spidermanattacks #londonspiderman #asdaspiderman #asda #attackinlondon #claphamjunctionasda #claphamjunction #podcast #news #realnews #nofakenews #igtvchannel #youtube #Club100 #Club100tv pic.twitter.com/Fmr6udJ7oa
— CLUB 💯 (@club100tv) July 23, 2021
குறிப்பாக ஸ்படைர் மேன் உடையணிந்து வந்து தாக்குவதாக பலர் குறிப்பிட்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து, 31 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி 37 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், இவர்களைத் தொடர்ந்து 17 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களையும், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு 10.40 மணிக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதில், 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மீதம் காயமடைந்த 5 பேர் சம்பவ இடத்திலே சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுவரை 5 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சூப்பர் மார்க்கெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் கடையில் வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வன்முறை சம்பவம் நடந்ததைக் கண்டு சாதரணமாக விடமாட்டோம்.
போலீஸ் விசாரணையில் போலீசாருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக யாரேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டார்.