ஏழுமலையானை தரிசிக்க போலி டிக்கெட்.. 2 பேரை அள்ளியது போலீஸ்..!

ஏழுமலையானை தரிசிக்க போலி டிக்கெட்.. 2 பேரை அள்ளியது போலீஸ்..!

Update: 2022-01-25 13:32 GMT

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு போலி தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சைதுல், அவருடைய உறவினர்கள் 6 பேர் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களிடம் இருந்த 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் போலியானது எனத் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பக்தர்களிடம் விசாரித்தபோது, அந்த தரிசன டிக்கெட்டுகளை கடப்பாவைச் சேர்ந்த வினய், திருமலையில் பக்தர்களை போட்டோ எடுக்கும் புகைப்படக்காரர் வேணு ஆகியோர் விற்பனை செய்ததாகக் கூறினர். விற்பனை செய்த தரிசன டிக்கெட்டுகளுக்கு கூகுள்பே மூலம் மொத்தம் 5,600 ரூபாய் பட்டுவாடா செய்ததாக கூறினர்.

இதையடுத்து தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வினய், வேணு ஆகியோரை பிடித்து திருமலை-2 டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இருவரும், பக்தர்களிடம் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக கூறினர். 2 பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News