கள்ளக்காதல் வெறி ! பெற்ற மகள்களை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த தந்தை!

கள்ளக்காதல் வெறி ! பெற்ற மகள்களை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த தந்தை!

Update: 2021-06-28 18:24 GMT

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க இடையூராக இருந்ததால் பெற்ற மகள்களையே தந்தை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த கொடூரம் கிராம மக்களை அதிரவைத்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ளது கலர்பூல் என்ற பகுதியில் 8 மற்றும் 6 வயதுடைய சகோதரிகளான இரண்டு சிறுமிகள் தங்கள் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது சிறுமிகள் மின்சார வயர் மீது கால் வைத்தது தெரியவந்ததால், மின் சப்ளையை துண்டித்தனர்.

\எனினும் அதற்குள் சிறுமிகள் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் சிறுமியின் தாய், தந்தை யாரும் இல்லை. அங்கு கிராம மக்களும் திரண்டு கதறி அழுதனர். அப்போது வந்த சிறுமிகளின் தாயார், தனது மகளைகளை தனது கணவர் தான் திட்டமிட்ட கொலை செய்திருப்பதாகவும் மின்சார வயரை தெரியாமல் மிதிக்கவில்லை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளகாதல் இருந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் மகள்களை கொலை செய்ததாகவும் கூறினார்.

அந்த நேரம் பார்த்து எதுவும் தெரியாதது போல் சிறுமிகளின் தந்தை அங்கு வந்துள்ளார். அவர் பார்த்ததும் ஆத்திரத்தில் இருந்த கிராம மக்கள் அடிக்கத் தொடங்கினர். சிறுமிகளை கொலை செய்ததாக கூறி தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் தன்னுடைய மனைவி வேண்டுமென்றே தன்னை சிக்க வைத்திருப்பதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனால் சிறுமிகள் கொலை செய்யதற்கான காரணம் என்ன? யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

newstm.in

Tags:    

Similar News