5 பேர் கொண்ட குடும்பம் சென்ற கார் மீது விழுந்த இடி... பதறவைக்கும் வீடியோ..!!
5 பேர் கொண்ட குடும்பம் சென்ற கார் மீது விழுந்த இடி... பதறவைக்கும் வீடியோ..!!
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் வேவர்லி பகுதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் 8 மாத கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர். மழை பெய்துகொண்டிருந்த அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று காரை தாக்கியுள்ளது.
இதில் கார் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கார்ல் ஹோபி கூறுகையில், அவர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள், குழந்தைகள் நலமாக இருப்பதை உறுதி செய்தபின் நிம்மதியடைந்தனர். மின்னல் தாக்கியதால் கார் பழுதடைந்து நடுவழியில் நின்றது. பாதையில் இருந்து காரை நகர்த்த முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது என்றார்.