பேமிலிக்கே ஷாக்.. அந்தரத்திலிருந்து ஆட்கள் மேல் விழுந்த சீலிங் பேன் !!

பேமிலிக்கே ஷாக்.. அந்தரத்திலிருந்து ஆட்கள் மேல் விழுந்த சீலிங் பேன் !!

Update: 2021-08-27 07:46 GMT

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஆபத்தான கட்டத்தில் இருந்து தப்பி பிளைத்திருப்போம். தனியாக இருக்கும் நாட்களில் அவை குறித்து சிந்தித்ததும் உண்டு. அந்த வகையில் வியட்நாம் நாட்டில் ஒரு குடும்பத்திற்கே ஆபத்து ஏற்பட்டு அதிர்ஷ்டமாக அது தப்பியிருக்கிறது. 

வியட்நாம் நாட்டின் பேக் நின்ஹ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்தினர் 6 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். குடும்ப பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் உணவு அருந்தினர். அப்போது திடீரென சீலிங் பேன் ஒன்று அவர்கள் நடுவே விழுந்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

வைரல் ஹாக் என்ற பிரபலமான யூடியூப் சேனில் இந்த வீடியோ வெளியாகியிருந்தது. இந்த வீடியோவில் 6 பேர் வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் மேலே இருந்த பேன் தவறி அவர்களுக்கிடையே விழுந்தது. நல்லவேளையாக யாருக்கும் இதில் அடிபடவில்லை. இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் திகைத்தனர்.

பேன் விழுவதற்கு முன்பாக 6 பேரில் சிறுவன் ஒருவன் மட்டும் மேலேயே பார்த்த வண்ணம் இருந்தான். இதனால் பேன் விழப்போவதை முன்கூட்டியே அறிந்தும் அதனை குடும்பத்தினரிடம் சிறுவன் கூறவில்லை எனவும் கருதமுடிகிறது. மேலும் அந்த பேன் ஒருவர் மீதும் விழாமல் இறக்கை அவர்களுக்கு இடையே விழுந்ததால் அனைவரும் காயமின்றி தப்பினர். 

Full Viewn

ewstm.in

Tags:    

Similar News