பிரபல நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

பிரபல நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

Update: 2021-07-29 11:41 GMT

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகி, 1980 மற்றும் 1990களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். தற்போது, குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார்

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் கார்த்திக், அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த கார்த்திக், உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறு விரிசல் ஏற்பட்டு இருப்பது ஸ்கேனில் தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News