பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் மரணம்! சோகத்தில் திரையுலகினர்!
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் மரணம்! சோகத்தில் திரையுலகினர்!
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ராமச்சந்திரன் இன்று அதிகாலை மரணமடைந்தார்.
களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னட படங்களில் ராமச்சந்திரன் நடித்துள்ளார்.
இது தவிர, மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை போன்ற தமிழ் படங்களையும், கன்னட படங்களையும் தயாரித்துள்ளார். சினிமா வட்டாரங்களில் ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் ஜி.ஆர் என்று அன்பாக அழைக்கப்பட்டு வந்த ஜி.ராமச்சந்திரன் (73) உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.
சமீபத்தில் தான் அவரது மனைவி தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு சிவகுமார், சாமி குமார் என்கிற இரு மகன்கள் உள்ளனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4.30 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு மாங்கட்டில் உள்ள பண்ணை தோட்டத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.