பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகினர் அதிர்ச்சி !
பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகினர் அதிர்ச்சி !
சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை தயாரித்து நடித்தவர் குமாரராஜன். 2013ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை பாலு ஆனந்த் என்ற இயக்குநர் இயக்கினார். பாலு ஆனந்த், கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, கிங்காங் ஆகியோர் கூட்டணியில் சந்தித்ததும் சிந்தித்ததும் திரைப்படத்தில் காமெடியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சந்தித்ததும் சிந்தித்ததும் படத்தைத் தொடர்ந்து துப்பார்க்கு துப்பாய, ரெண்டுல ஒண்ணு ஆகிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் அவரது தற்கொலை திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
லாரி பாடி பில்டிங் உரிமையாளர் குமாரராஜன், நாமக்கல் குமார் என்று நடிகர் ஆனார். அந்த பெயரிலும் பரவலாக அழைக்கப்பட்டு வந்தார். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் தனது சொந்த ஊரான நாமக்கல் சென்றிருந்தார்.
இந்த நிலையில் தான் இவர் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குமாரராஜனின் தற்கொலை சம்பவம் நாமக்கல்லை மட்டுமல்லாது திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. குமாரராஜன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in