மகனுக்காக மீண்டும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்..!

மகனுக்காக மீண்டும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்..!

Update: 2021-08-25 23:08 GMT

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பிசியாக பறந்துகொண்டிருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை கொண்டவர். கதை நன்றாக இருந்தால் உடனே அந்த படத்தை தயாரிப்பது மட்டுமல்லாது சில சமயங்களில் இயக்கவும் செய்கிறார்.

தற்போது தமிழில், அண்ணாத்த, எனிமி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம், கே.ஜி.எப்: சாப்டர் 2 உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1994-ம் ஆண்டு நடிகை லலிதாகுமரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் பிரகாஷ் ராஜ், இந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை காதலித்தார். கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்ட் 24-ம் தேதி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் அவர்கள், தங்களின் 11-ம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர். அப்போது தனது மகன் வேதாந்த் மற்றும் மகள்கள் முன்னிலையில், அவர்கள் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்துகொண்டனர்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் மகனுக்காக, நானும் போனி வர்மாவும் மீண்டும் திருமணம் செய்துகொண்டோம்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


 

Tags:    

Similar News