பிரபல நடிகரின் மகன் சாலை விபத்தில் பலி..!

பிரபல நடிகரின் மகன் சாலை விபத்தில் பலி..!

Update: 2021-07-05 16:08 GMT

பிரபல நடிகரின் மகன் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திரைஉலகினரிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடம் மற்றும் துளு திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் சூர்யோதயா. இவருடைய மகன் மயூர் (20). நடிகர் சூர்யோதயா தனது மகனுடன் ஸ்ரீ காந்தகாவல் பகுதியில் வசித்து வந்தார். மயூர், அங்குள்ள கல்லூரியில் பி.காம் பயின்று வந்தார்.

இந்நிலையில், மயூர் தனது நண்பர் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்தில், அண்டை வீட்டில் வசித்து வரும் 13 வயது சிறுமியை ஏற்றிக்கொண்டு வெளியே சென்று வருவதற்காக புறப்பட்டுள்ளனர்.

மயூர் ஓட்டிச் சென்ற வாகனம் அங்குள்ள பயதரஹள்ளி பகுதியில் சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்புச்சாலையில் செல்லும் சமயத்தில், முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.



இந்த விபத்தில், மயூரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த சிறுமிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மயூரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நடிகர் சூர்யோதயாவின் மகன் விபத்தில் பலியான சம்பவம் கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News