உள்ளாடை குறித்து பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து!!
உள்ளாடை குறித்து பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து!!
உள்ளாடை அளவு குறித்து நடிகை ஸ்வேதா திவாரி பேசியது பூதாகரமாகியுள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரி (41) பட விளம்பர விழாவில் நகைச்சுவைக்காக கூறிய கருத்து மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. தாம் புதிதாக நடிக்கவிருக்கும் இணையத் தொடரின் விளம்பர நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
ஸ்வேதா திவாரி ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். அந்த தொடரின் விளம்பரம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘கடவுள் எனது உள்ளாடையை அளவு எடுத்து கொண்டிருக்கிறார்’என நகைச்சுவையாக பேசினார்.
அவர் பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில மந்திரி நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் போபால் போலீஸ் கமிஷனரிடம் முழு விவகாரம் குறித்து அறிக்கையும் கேட்டுள்ளார். நடிகை பேசியது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
newstm.in