பிரபல நடிகையின் கணவர் திடீரென காலமானார்.. பிரபலங்கள் அஞ்சலி !!

பிரபல நடிகையின் கணவர் திடீரென காலமானார்.. பிரபலங்கள் அஞ்சலி !!

Update: 2021-06-16 10:45 GMT

மறைந்த பழம்பெரு கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் கணவர் சாய்பிரசாத் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 

கருப்பு வெள்ளி முதல் நவீன காலம் வரை திரையில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. சேது படத்தில் கான கருங்குயிலே படத்திற்கு இவர் ஆடிய நடனம் இன்றைய ரசிகர்களாலும் கவரப்பட்டு வருகிறது. ஆனால் புற்றுநோய் காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு இவர் காலமானார். இவரது கணவர் சாய்பிரசாத். சாய்பிரசாத் - ஜோதிலட்சுமி தம்பதிக்கு ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். இவரும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் இன்று காலை சாய்பிரசாத் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Adress:
Shreshta Sastha Apts.
1St floor.
Madhavan Nair Road,
Mahalingapuram, chennai   
(Third building from Ayyappan Temple.)
 
newstm.in

Tags:    

Similar News