பிரபல நடிகையின் சமூகவலைதள பக்கம் முடக்கம் !!

பிரபல நடிகையின் சமூகவலைதள பக்கம் முடக்கம் !!

Update: 2021-09-27 18:34 GMT

பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக்கர்கள் திடீரென முடக்கியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகை டிஸ்கா சோப்ரா. இவர் திரைப்பட தயாரிப்பாளர்களாகவும் உள்ளார். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள அவர், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கருத்துகளையும், ெசய்திகளையும், தனது அன்றாட நடவடிக்கைகளையும் பதிவிட்டு வருவார். 

இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனை நடிகை டிஸ்கா சோப்ரா, தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பக்கத்திற்கு எந்த செய்தியையும் டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட பதிவில், ஹாய்... எனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உங்களுடன் நான் தொடர்பில் இருக்க வேண்டும் என்று  விரும்புகிறேன். எனது வாழ்க்கை, வேலை மற்றும் வேடிக்கையான நிகழ்வுகளை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையைாக வைத்திருந்தேன்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், என்னுடைய  நிறைய பதிவுகள் நீக்கப்பட்டன. சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். குற்றவாளிகள் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.


newstm.in

Tags:    

Similar News