ஆஃப்கானிஸ்தான் என்றவுடன் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை..!

ஆஃப்கானிஸ்தான் என்றவுடன் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை..!

Update: 2021-08-25 13:18 GMT

தமிழில் தயாரான மல்லி மிஷ்து என்கிற படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை அர்ஷித்கான். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இவர், வெப் சிரீஸ், தொலைக்காட்சி தொடர்கள், பாடல் ஆல்பங்கள் போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். பெண்கள் மீதான் அடக்குமுறை ஒவ்வொன்றாக அறிவிக்கப்ப்ட்டு வருகின்றன.

இந்நிலையில் அக்டோபர் மாதம் ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரருக்கும், நடிகை அர்ஷித்கானுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. தற்போது அவர் இந்த திருமணத்தை நிறுத்துவிட்டார்.

”தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டோம். எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன். எனது பெற்றோர் எனக்கு இந்திய மாப்பிள்ளையை பார்ப்பார்கள்'' என்று அர்ஷித்கான் கூறியுள்ளார்.
 

Tags:    

Similar News