புர்கா அணிந்து சென்று தனது படத்தை தியேட்டரில் பார்த்த பிரபல நடிகை!!
புர்கா அணிந்து சென்று தனது படத்தை தியேட்டரில் பார்த்த பிரபல நடிகை!!
‘ஷ்யாம் சிங்கா ராய்’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியானது. நானி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராகுல் சங்ரித்யன் இயக்கியுள்ளார்.
தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ்,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் வெளியாகி 5 நாட்களில் தெலுங்கில் மட்டுமே 24 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராடுக்களைக் குவித்துவரும் இப்படத்தினை நடிகை சாய் பல்லவி, இயக்குநர் ராகுல் சங்ரித்யனுடன் புர்கா அணிந்துகொண்டு ஹைதராபாத்திலுள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்துப் பார்த்துள்ளார்.
ஆனால், புர்கா அணிந்திருந்ததால் சாய் பல்லவியை ரசிகர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#SaiPallavi Surprise Visit Sriramulu Theater 😍😎
— Mahesh తారక్_వీరాభిమాని🌊 (@maheshBujji9999) December 29, 2021
Just Loved it ❤️ @Sai_Pallavi92@NameisNani @IamKrithiShetty#ShyamSinghaRoy pic.twitter.com/J558SXcmk5
newstm.in