பிரபல நடிகை திடீர் திருமணம்... வாழ்த்து தெரிவித்து வரும் திரையுலகம்!!

பிரபல நடிகை திடீர் திருமணம்... வாழ்த்து தெரிவித்து வரும் திரையுலகம்!!

Update: 2021-10-06 06:00 GMT

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் அறிமுகமானார். தமிழில் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பிச்சை’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், சித்தார்த்துக்கு மனைவியாகவும், ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். நவம்பர் 2-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் கதையோ லிஜோமோல் ஜோஸ் கதாபாத்திரத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. இதனை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

பல்வேறு முன்னணிப் படங்களில் நடித்து வந்த லிஜோமோல் ஜோஸ் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் பெயர் அருண் ஆண்டனி. இவர்களுடைய திருமணம் நேற்று (அக். 4) கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இந்தத் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News