பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல கார்ட்டூனிஸ்ட் காலமானார்.. முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் !!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல கார்ட்டூனிஸ்ட் காலமானார்.. முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் !!

Update: 2022-01-18 19:00 GMT

பிரபல கார்ட்டூனிஸ்ட் நாராயண் தேப்நாத். (97). இவர் கார்ட்டூன் உலகில் புகழ் வாய்ந்த ‘பத்துல் தி கிரேட்” மற்றும் ‘நான்டே பேன்டே’ போன்ற கற்பனை பாத்திரங்களை உருவாக்கியர். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.

97 வயதான நாராயண் முதுமை காரணமான உடல் பாதிப்புகளால் சில மாதங்களாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் மருத்துவமனையில் இருந்தவாறு தனது கார்டூன் ஓவியங்களை வரைந்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், இவரது சாதனை கவுரவிக்கும் வகையில் கடந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது. 

இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை மாநில கூட்டுறவு அமைச்சர் அரூப் ராய் மற்றும் உள்துறை செயலர் பி.பி.கோபாலிகா ஆகியோர் கடந்த வாரம் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் நேரில் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை கார்ட்டூனிஸ்ட் நாராயண் தேப்நாத் காலமானார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற தேப்நாத் காலை 10.15 மணியளவில் காலமானதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.

மருத்துவமனையில் நீண்டகாலம் சிகிச்சை பெற்றாலும் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார் . அவருக்கு பல்வேறு தரப்பினரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா உள்பட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


newstm.in

Tags:    

Similar News