கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலி !!
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலி !!
இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமெடுத்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோரே, அக்ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார்.
மும்பையில் வசித்து வந்த இவர், சில நாட்களுக்கு முன் பனாரஸ் சென்றுள்ளார். அங்கிருந்து மும்பை திரும்பிய அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சோதனை மேற்கொண்டார். அவருக்கு தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in