பிரபல ஒளிப்பதிவாளர் காலமானார் !

பிரபல ஒளிப்பதிவாளர் காலமானார் !

Update: 2021-02-01 15:44 GMT

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ் இன்று காலமானார். அவரது மறைவால் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. சென்னை அடையாறில் உள்ள பிலிம் இன்ஸ்ட்யூட்டில் படித்த, பி.எஸ் நிவாஸ்.கடந்த 1975-ம் ஆண்டு முதல் 1985 ம் ஆண்டு வரை மிகவும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார்.

தமிழ் திரையுலகில் மிகவும் புகழ் பெற்ற படம் 16 வயதினிலே படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் பி.எஸ் நிவாஸ். இதனையடுத்து, சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள்,புதிய வார்ப்புகள் உள்ளிட்ட  பெரும்பாலான படங்களில் ஒளிப்பதிவு செய்தார். கடந்த 1977 -ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான‌ மோகினியாட்டம் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பி.எஸ் நிவாஸிக்கு கிடைத்தது.


ஸ்ரீதர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது போன்றபடங்களுக்கு பி.எஸ் நிவாஸ் ஒளிப்பதிவு செய்தார். மேலும் இளையராஜா தயாரிப்பில் உருவான கொக்கரக்கோ மற்றும் தனிக்காட்டு ராஜா, பாஸ்மார்க் உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படி பல்வேறு பெருமைக்குரிய பி.எஸ் நிவாஸ் இன்று காலமானார். அவருக்கு இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News