ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் லெஜண்ட், லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

ஷேன் வார்ன் தன் மகன் ஜேக்சனுடன் 300 கிலோ எடை கொண்ட பைக்கில் மெல்போர்னில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. ஞாயிறு அன்று விபத்து நடந்துள்ளது, ஆனால், கண்களுக்குத் தெரியும் காயம் எதுவும் இல்லை. அதனால் அவர் உடனே மருத்துவமனைக்குச் செல்லவில்லை. ஆனால் திங்களன்று கடும் வலி ஏற்படவே ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.

விபத்தில் அவரது பைக் சுமார் 15 அடி சறுக்கிக் கொண்டு சென்றது. இதில் அவரது இடுப்பு, பாதம், கணுக்கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரது மகன் தான் உடனே ஷேன் வார்னை தூக்கி உறுதுணையாக இருந்துள்ளார்.

ஆஷஸ் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஷேன் வார்ன் இந்த விபத்தினால் கமெண்ட்ரிக்கு உடனடியாக வருவாரா அல்லது 2வது டெஸ்ட் போட்டிக்குத்தான் வருவாரா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

Tags: