பிரபல கிரிக்கெட் வீரர் விபத்தில் பலி !

பிரபல கிரிக்கெட் வீரர் விபத்தில் பலி !

Update: 2021-02-07 13:55 GMT

மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் எஸ்ரா மொஸ்லே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 67. 

மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் எஸ்ரா மொஸ்லே. இவரது பந்து வீச்சைக்கண்டு பல்வேறு நாட்டு வீரர்களும் அஞ்சுவர். அந்த அளவுக்கு எதிரியைகுறி பார்த்துஅவுட் செய்வதில் மிகவும் வல்லவர். இதனால், இவர் எப்போது  களத்தில் இறங்கினாலும் ரசிகர்கள் பட்டாளம் உற்சாகம் அடைந்துவிடுவார்கள். 

இந்நிலையில், எஸ்ரா மொஸ்லே சைக்கிளில் சென்று கொண்டுருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு கார், அவர் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில், பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 2016 -ம் ஆண்டு பெண்களுக்கான ஐசிசி டி20 உலக கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். 

இவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  எஸ்ரா மறைவால் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  

Tags:    

Similar News