#BREAKING:- பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு.. தொடரும் சோகம் !!
#BREAKING:- பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு.. தொடரும் சோகம் !!
ஜி.ஆர் கோல்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
சவுண்ட் பார்ட்டி, மனுநீதி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை போன்ற படங்களை தயாரித்த ஜி.ஆர் கோல்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் ஜி. ராமச்சந்திரன் (எ) ஜி.ஆரின் மனைவியுமான ஆர்.பி. பூரணி. வயது 62. இவர் இன்று காலை 7 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அவரது இறுதி ஊர்வலம் no.145, பூந்தமல்லி ஹை ரோடு, வேலப்பன் சாவடி, சென்னை - 77 அண்ணையாரின் உடல் மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு மாங்கட்டில் உள்ள பண்ணை இடத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2ஆவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தான் உயிரிழப்பும் அதிகளவில் உள்ளது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தொற்றுக்கு உயிரிழந்து வருகின்றனர். நேற்று அசுரன் பட நடிகர் காலமான சம்பவம் திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அதேபோல் நடிகர் விவேக், பாண்டு, நெல்லை சிவா என நடிகர்கள், இயக்குநர்கள், சின்னத்திரை நடிகர்களும் உயிரிழந்துள்ளனர்.
newstm.in