பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை..!! ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை..!! ரசிகர்கள் அதிர்ச்சி!

Update: 2021-09-30 18:26 GMT

கன்னட தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சவுஜன்யா.இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் தன்னுடைய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் திடீரென கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே பொறுப்பு. அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு தன்னால் வாழ முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார் செளஜன்யா.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது வேறு பிரச்சனையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News