பிரபல மாடல் அழகி கொலை வழக்கு.. கார் டிரைவர் தான் குற்றவாளி !!

பிரபல மாடல் அழகி கொலை வழக்கு.. கார் டிரைவர் தான் குற்றவாளி !!

Update: 2021-03-24 08:26 GMT

கொல்கத்தாவை சேர்ந்தவர் மாடல் அழகி பூஜா சிங். இவர் பணி நிமிர்த்தமாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரு வந்திதருந்தார். தனது வேலையை முடித்துக்கொண்டு டெல்லி செல்ல திட்டமிட்ட மாடல் அழகி விமான நிலையம் செல்ல கால்டாக்சி மூலம் கார் ஒன்றை புக் செய்தார்.

காரில் சென்றுக்கொண்டிருக்கும் போதே மாடல் அழகி பூஜாவின் பணம் நகைகளை கார் ஓட்டுநர் நோட்டமிட்டுள்ளார். பின்னர் காரை ஆள் நடமாட்டம் இல்லா இடத்திற்கு கொண்டு அவரை சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்த பணம், நகைகளை எடுத்துக்கொணடு விமான நிலையம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பூஜாவை குழி தோண்டி புதைத்துள்ளார்.

இந்த நிலையில் பூஜா சிங் மாயமானது குறித்து குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் இது குறித்து கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் புகார்கள் வந்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்தனர். அப்போது, கடைசியாக அவர் காரில் விமான நிலையம் சென்றதும் ஆனால் அவர் விமான நிலையம் சென்றடையவில்லை என்பதும் உறுதியானது. 

இதனையடுத்து நீண்ட நாட்கள் போலீசார் விசாரணை நடத்தியதில், அதில் கார் டிரைவரான சஞ்சீவினி நகரை சேர்ந்த நாகேஷ் என்பவர் பிடிபட்டார். கடன் சுமை மற்றும் வாகனத்தின் மீதான கடன் அதிகமாக இருந்ததால் மாடல் அழகி பூஜா சிங்கை கொலை செய்து, கொள்ளையடித்ததாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார். இதன்பின்னரே பூஜாவுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

பின்னர், இவர் கொடுத்த வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை வைத்து, போலீசார் தேவனஹள்ளி 5வது மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிபதி  போலீசார், கார் ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் உறுதியானதால் அவரே குற்றவாளி என்பதை உறுதி செய்தார்.

இதனையடுத்து விரைவில் இது குறித்த இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று கூறிய நீதிபதி, வழக்கை மார்ச் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


newstm.in


 

Tags:    

Similar News