பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!!

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!!

Update: 2021-12-27 06:00 GMT

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது. 78.

மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் சேர்ந்த ராமையாவின் இளைய மகன் இவர். எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், ஏறக்குறைய 800 பாடல்கள் வரை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.

முன்னணி இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்களிடம் இவர் பணியாற்றியுள்ளார். பாடகர் மட்டுமல்லாமல் நடிகராகவும் முத்திரையை பதித்தவர் மாணிக்க விநாயகம்.

திருடா திருடி, கம்பீரம், பேரழகன்,வேட்டைக்காரன், யுத்தம் செய் போன்ற எண்ணற்ற திரைப் படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக மாணிக்க விநாயகம் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Similar News