#BIG NEWS:- பிரபல தயாரிப்பாளர் காலமானார்.. தமிழ்த் திரையுலகினர் இரங்கல்..!
#BIG NEWS:- பிரபல தயாரிப்பாளர் காலமானார்.. தமிழ்த் திரையுலகினர் இரங்கல்..!
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கார்த்திக் உள்ளிட்ட நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் முத்துராமன் என்பவர் சற்றுமுன் காலமானார்.
பழம்பெரும் தயாரிப்பாளர் முத்துராமன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து உள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்த் நடிப்பில், துரை இயக்கத்தில் உருவான ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படத்தை தயாரித்தது முத்துராமன் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தயாரிப்பாளர் எம்.முத்துராமன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.