காதலரை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை!!

காதலரை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை!!

Update: 2022-01-28 07:00 GMT

நாக கன்னிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வித்தியாசமான சீரியலான நாகினி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை மௌனி ராய் பாலிவுட் படங்களில் நடித்து கலக்கி வருகிறார். சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவரும் இளம் தொழிலதிபரான சூரஜ் நம்பியாரும் கடந்த பல மாதங்களாக காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியானது.

இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் இணைந்து வெளிநாடுகளில் ஜாலியாக சுற்றி திரிந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதனிடையே கடந்த மாதம் மௌனி ராயின் நெருங்கிய உறவினர் ஒருவர் இருவருக்கும் புத்தாண்டில் திருமணம் நடக்கும், ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் அவர் சொன்னது போலவே நடிகை மௌனி ராய் - தொழிலதிபர் சூரஜ் நம்பியார் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மௌனி ராய் காதலன் சூரஜ் நம்பியாரை கோவாவில் திருமணம் செய்து கொண்டார்.

மௌனி திருமணத்தின் பல காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. புதுமணத் தம்பதிகள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆசீர்வாதங்களை பெறும் போட்டோவும் வைரலாகி வருகிறது. கோவாவில் மலையாளம் மற்றும் பெங்காலி சடங்குகளின்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது.

newstm.in

Similar News