பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி...

பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி...

Update: 2021-06-24 23:29 GMT

மலையாள பட உலகில் முன்னணி பாடலாசிரியராக இருந்தவர் பூவாசல் காதர். இவர் இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், இளையராஜா, சங்கர் கணேஷ், கங்கை அமரன் இசையில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார்.

பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எஸ்.ஜானகி, கே.எஸ்.சித்ரா, பி.சுசீலா. பி.மாதுரி, உண்ணிமேனன் உள்ளிட்ட பல பிரபல பாடகர்கள் அனைவரும் பூவாசல் காதர் வரிகளில் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட பூவாசல் காதர், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கபட்டனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பூவாசல் காதர் மறைவு குறித்து பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக இரங்கல் பதிவு செய்துள்ளார்.

அதில், “மலையாளத் திரையுலகில் அழகான பாடல்களை அர்ப்பணித்த பூவாசல் காதர் இன்று மறைந்தார். இந்த கோவிட் காலத்தில் எத்தனை விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழந்துள்ளோம். எனது முதல் பாடலான ‘செல்லம் செல்லம்’ என்ற மாநில விருது பெற்ற பாடல் மற்றும் ‘பூமநேம்’ என்ற சூப்பர்ஹிட் பாடல் உள்பட பல பாடல்களை எழுதியுள்ளார். மிகவும் மென்மையான மரியாதைக்குரிய நபராக இருந்த பூவாசம் காதர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய விரும்புகிறேன். அவர்களது குடும்பத்தினரின் பெரும் துயரத்தில் பங்கு கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News