ரசிகர்கள் செம கொண்டாட்டம்... ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரெய்லர் வெளியிடு நேரம் அறிவிப்பு !!

ரசிகர்கள் செம கொண்டாட்டம்... ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரெய்லர் வெளியிடு நேரம் அறிவிப்பு !!

Update: 2021-10-26 19:30 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனையடுத்து அந்த படம் குறித்து தொடர்ந்து அப்டேட் வந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் எகிறிகொண்டே போகுது.

இந்நிலையில் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக அண்ணாத்த படத்தில் ட்ரெய்லர் நாளை 6  மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்து. 

தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே அண்ணாத்த படத்தில் நடித்துள்ளது.  இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து கதையில் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது.

இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்ணாத்த படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.  

அதாவது, இதுவரை படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. ’அண்ணாத்த’ டீசர் யூடியூபில் இதுவரை 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த நிலையில், நாளை மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.


newstm.in

Tags:    

Similar News