ரசிகர்கள் ஏமாற்றம்.. மீண்டும் தள்ளிபோனது மிஷன் இம்பாஸிபிள் 7, 8 பாகங்களின் ரிலீஸ் தேதி !

ரசிகர்கள் ஏமாற்றம்.. மீண்டும் தள்ளிபோனது மிஷன் இம்பாஸிபிள் 7, 8 பாகங்களின் ரிலீஸ் தேதி !

Update: 2022-01-23 07:45 GMT

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று சினிமா துறையையும் விட்டுவைக்கவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் சினிமா துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் முடக்கப்பட்டுள்ளது. உள்ளூர் முதல் ஹாலிவுட் திரைப்படங்கள் வரை படப்பிடிப்பு, வெளியீடு என பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகில் வலிமை உள்ளிட்ட படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், உலகளவில் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற, நடிகர் டாம் க்ரூஸின் வெற்றிகரமான சீரிஸான மிஷன் இம்பாஸிபிளின் 7 மற்றும் 8 ஆம் பாகங்களின் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸ் கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போல. இதிலும் அவர் ரகசிய உளவாளிதான், அவருக்கென ஒரு டீம், அதிரடி சண்டைக்காட்சிகள், நாசக்காரர்களை அழிப்பது என தூள் பறக்கும்.  

மிஷன் இம்பாஸிபிள் படத்தின் ஏழாவது பாகத்தை 2020 ஜுலையில் வெளியிடுவதாக அறிவித்து பிறகு டிசம்பருக்கு மாற்றியது பாராமவுண்ட் நிறுவனம். பிறகு நவம்பர் 2021 க்கு மாற்றினர். மேலும் அடுத்தடுத்து இரண்டு தேதிகளை அறிவித்த, அந்நிறுவனம் இப்போது பட வெளியீட்டை 2023 ஜுலை 14 க்கு ஒரேயடியாக தள்ளி வைத்துள்ளனர்.

இதேபோல் மிஷன் இம்பாஸிபிள் 8 வது பாகத்தை 2023, ஜுலை 7 வெளியிடுவதாக அறிவித்திருந்தவர்கள் இப்போது மேலும் ஒருவருடம் தள்ளி 2024, ஜுன் 28 வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த இரு பாகங்களையும் மிஷன் இம்பாஸிபிள் - ஃபால்அவுட் திரைப்படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவாரே இயக்குகிறார். மிஷன் இம்பாஸிபிள் 7,  8 ஆவது பாகங்கள் தள்ளிப் போனது டாம் க்ரூஸ் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமா என அதிருப்தியில் உள்ளனர். 

  newstm.in

Tags:    

Similar News