பிறந்தநாள் வாழ்த்துக் கூற, விஜய்யின் வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்கள்... திடீர் தர்ணா!!

பிறந்தநாள் வாழ்த்துக் கூற, விஜய்யின் வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்கள்... திடீர் தர்ணா!!

Update: 2021-06-22 20:52 GMT

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு பிரந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டு முன் இன்று ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். பெண் ரசிகர்கள் சிலர் பரிசுப் பொருட்களுடன் காத்திருந்தனர். சாலையில் சென்ற சொகுசு கார்களை மறித்து காருக்குள் விஜய் இருக்கிறாரா என்றும் சிலர் ஆர்வமிகுதியால் பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் விஜய் வீட்டில் இல்லை என்று கூறியும் கலைந்து செல்ல மறுத்த ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக கூறி குடியிருப்புவாசிகள் புகாரளிக்கவே போலீசார் வந்து ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News