கொடுமை! பிரபல நடிகையின் மொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு!
கொடுமை! பிரபல நடிகையின் மொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். விதிவிலக்கே இல்லாமல் வைரஸ் அனைவரையும் பாதிக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் தொடங்கி அரசியல் தலைவர்கள் பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் மகாராஷ்டிரா மாநிலம் நோய் பரவலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டில் அறிமுகமான சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அனைவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கணவர் மற்றும் இரு குழந்தைகளும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி வருகிறோம் என்றும் சமீரா ரெட்டி கூறியுள்ளார்.
அதாவது, சமீரா ரெட்டி கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்கிற தொழிலதிபரைத் திருமணம் செய்தார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஹான்ஸ் என்கிற மகனும் நைரா என்கிற மகளும் உள்ளனர்.
newstm.in