ரசிகர்கள் ஷாக்... விஜய், தனுஷ் பட நடிகைக்கு கொரோனா !!
ரசிகர்கள் ஷாக்... விஜய், தனுஷ் பட நடிகைக்கு கொரோனா !!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தல் ஜுரம் ஒரு பக்கத்தில் இருந்தாலும் கொரோனாவின் தாக்கமோ இன்னும் குறையவில்லை. அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பைரவா, தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் என அடுத்தடுத்து பலப் படங்கள் நடித்துள்ளார் நடிகை அம்மு அபிராமி.
இவர் தனது சுட்டித்தனமா நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த அம்மு அபிராமி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், எனக்கு தொடர்ச்சியான காய்ச்சல் இருந்ததால் பரிசோதித்து பார்த்தேன். கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே, மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டேன். உறுதியுடன் கொரோனாவிலிருந்து மீண்டு வருவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
newstm.in