வேகமாக பரவும் கொரோனா.. தியேட்டர்கள் மூடல், திருமணத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.. புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு !!

வேகமாக பரவும் கொரோனா.. தியேட்டர்கள் மூடல், திருமணத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.. புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு !!

Update: 2022-01-25 18:45 GMT

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும். அந்த வகையில் இரண்டாவது அலை முடிந்து தற்போதும், கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தினசரி தொற்று சுமார் ஆயித்து 500 பாதிப்பு இருந்த நிலையில், அதுவே கேரளாவில் அன்றைய தினம் பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று பரிசோதனை குறைந்ததால் பாதிப்பு 26,514 ஆக இருந்தது.

கடந்த சில தினங்களாகவே திருவனந்தபுரம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. நேற்று மட்டும் 3,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கேரளாவில் மாவட்டங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி திருவனந்தபுரம் மாவட்டம் தற்போது மிக மோசமாக தொற்று பாதிக்கப்பட்ட ‘சி’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. அரசியல், மத, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மத சடங்குகள் அனைத்தும் ஆன் லைன் மூலமாக நடத்த வேண்டும். திருமணம், இறுதி சடங்குகளுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும்.
 
10, 12 வகுப்புகள், இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் பள்ளி, கல்லூரிகளில் ேநரடியாக நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து வகுப்புகளும் ஆன் லைன் மூலமே நடத்த வேண்டும் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


 newstm.in


 

Tags:    

Similar News