குடிபோதையில் பெண்குழந்தையை கூவி கூவி விற்க முயன்ற தந்தை! மதுரையில் அலப்பறை!!
குடிபோதையில் 2ஆவது மனைவியின் குழந்தையை விற்க முயன்ற தந்தை..!
மதுரை திருமங்கலத்தில் குடிபோதையில் இருந்த தந்தை 8 மாதபெண் குழந்தையை விற்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். குடி பழக்கத்துக்கு அடிமையான ராஜதுரை, இரண்டாவது மனைவி பணிக்கு சென்ற பின் அவர்களது 8 மாத குழந்தையை பராமரித்து வந்துள்ளார். மதுபோதையில் குழந்தையுடன் திருப்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் பேருந்தில் ராஜதுரை சென்றுள்ளார். அவர் குடி போதையில் இருந்ததால் பேருந்து ஓட்டுநர், அவரை திருமங்கலத்தில் இறக்கி விட்டார்.
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், அதனை சமாளிக்க முடியாமல், சாலையில் நின்று குழந்தையை கூவி கூவி விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த திருமங்கலம் காவல் துறையினர், ராஜதுரையிடம் இருந்து குழந்தையை மீட்டு, அவரது இரண்டாவது மனைவியிடம் ஒப்படைத்தனர். பின்னர், ராஜதுரையை எச்சரித்து அனுப்பினர்.
newstm.in