திருமணமான 6 மாதத்தில் மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்!!

திருமணமான 6 மாதத்தில் மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்!!

Update: 2022-01-16 18:02 GMT

தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் வரதட்சணை கேட்டு மாமியாரை தரக்குறைவாக பேசிய மருமகனை, மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலக்கடையநல்லூர் இந்திரா காலனியை சேர்ந்த  கண்ணன் என்பவர், அவரது மகள் கற்பகஜோதியை சரத்குமார் என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

அப்போது வரதட்சணையாக 5 சவரன் நகை போடுவதாக பேசி, திருமணத்தின் போது 2 சவரன் நகை போட்ட நிலையில், தலைப் பொங்கலையொட்டி 3 சவரன் நகைகளையும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது மருமகன் சரத்குமார் மாமியாரை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாமனார் மற்றும் மாமியார் இருவரும் கடையநல்லூருக்கு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

அன்று இரவு மாமனார் வீட்டிற்கு வந்த மருமகன் சரத்குமார் மாமனாரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார் கண்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மருமகனை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், மாமனார் கண்ணணை கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News