முன்னாள் மாணவியுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியர்! கதறும் மனைவி!!

முன்னாள் மாணவியுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியர்! கதறும் மனைவி!!

Update: 2022-01-24 08:36 GMT

மனைவியை பிரிந்து தன்னுடைய முன்னாள் மாணவியுடன் ஓட்டம் பிடித்த அரசுப்பள்ளி ஆசிரியரை மீட்டுத்தர  வேண்டுமென மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி அடுத்த திருபுவணையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2018ஆம் ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அப்போது தான் பணிபுரிந்த பள்ளியில் படித்த மாணவி ரேகா என்பவருடன் ஆசிரியர் செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியது.

அந்த மாணவியை ஆசிரியர் செந்தில்குமார் கல்லூரி வரை தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ளார். தற்போது மாணவி கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மனைவியை பிரிந்த ஆசிரியர் செந்தில் குமார் கல்லூரி மாணவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட்டம் பிடித்தார்.

இதுகுறித்து திருபுவனைக் காவல் நிலையத்திலும் மற்றும் வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்திலும் முதல் மனைவியான மகேஸ்வரி புகார் அளித்தார். அந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரனிடம் மகேஸ்வரி புகார் அளித்தார்.

தன் கணவர் பணிபுரிந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது அந்த மாணவிக்கு 21 வயது ஆன நிலையில் தன்னையும் தனது மகனையும் பரிதவிக்க விட்டுவிட்டு அவர் மாணவியுடன் ஓட்டம் பிடித்து விட்டதாக மனைவி கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

newstm.in

Similar News