கொரோனா பயம்! போலீசாரை பார்த்து இருமியவருக்கு 98 நாட்கள் சிறை தண்டனை!

கொரோனா பயம்! போலீசாரை பார்த்து இருமியவருக்கு 98 நாட்கள் சிறை தண்டனை!

Update: 2021-03-30 14:23 GMT

சிங்கப்பூரில் வசித்து வருபவர் தேவராஜ் தமிழ் செல்வன் . இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் தனது தோழியை தாக்கியதற்காக செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் காவல்துறையும், மருத்துவமனை ஊழியர்களும்  எச்சரித்தும் கேட்காமல் தனது முகக்கவசத்தை அகற்றி, போலீஸ்காரர்களை  நோக்கி வேண்டுமென்றே இருமி தகாத வார்த்தைகளில் பேசினார்.

இது குறித்து அவர் மேல் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பொது இடத்தில் மது அருந்துதல், வாகனம் ஓட்ட தடை இருந்தபோது வாகனம் ஓட்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணையில் தேவராஜ் தமிழ்ச் செல்வனுக்கு 14 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News