மத்திய பட்ஜெட் 2022-23 - முக்கிய அம்சங்கள் பகுதி - 1..!!

மத்திய பட்ஜெட் 2022-23 - முக்கிய அம்சங்கள் பகுதி - 1..!!

Update: 2022-02-01 12:03 GMT

2022 - 2023-2-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு 

  • இ பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அறிமுகம் 
  • 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்
  • கங்கை கரையோரம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் . 
  • வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2023ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.ஃபிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் 
  • மின்சார வாகனங்களுக்கு பிரத்யேக மையங்களில் பேட்டரியை மாற்றிக் கொள்வது தொடர்பாக திட்டம் கொண்டு வரப்படும்.
  • நாடு முழுவதும் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கீடு 
  • ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்படும்.
  • நடப்பாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும்
  • பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை 
  • வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை
  • ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் புதிதாக 200 டிவி சேனல்கள்
  • சிறு குழந்தைகள் நலனுக்காக, நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். 
  • சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
  • ரூ.60 ஆயிரம் கோடியில் 18 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மனரீதியாக சிகிச்சையளிக்க மையங்கள் உருவாக்கப்படும்
  • மத்திய பட்ஜெட்: ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்
  •  நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் 
  • 25 ஆண்டுகளை இலக்காகக்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், ``வரும் நிதியாண்டில், உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை வரும். 
  • வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டில் 22,000 கி.மீ. தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். 
  • போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  •  2023-க்குள் 2,000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

Similar News