வருமான வரி தாக்கல்- மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
வருமான வரி தாக்கல்- மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
2019-20-ம் நிதியாண்டின் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஐடிஆர்-வி படிவத்தை நிறையப் பேர் இன்னும் தாக்கல் செய்யாததைக் கருத்தில் கொண்டு இச்சலுகையை வருமான வரித் துறை வழங்கியுள்ளது.
காகித வடிவத்தில் கையொப்பமிட்டு பெங்களூரு அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பியவர்களுக்கும், ஆன்லைன் மூலமாக எலெக்ட்ரானிக் முறையில் தாக்கல் செய்தவர்களுக்கும் இது பொருந்தும். இந்த வேலையை வரி செலுத்துவோர் கட்டாயமாக 2022 பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
அதாவது, டிஜிட்டல் கையொப்பம் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் வருமான வரி தாக்கல் செய்வோர், 120 நாட்களுக்குள் அதை சரிபார்க்க வேண்டியது விதியாகும். ஆதார், நெட்-பேங்கிங், ஏ.டி.எம். என இதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஆனால் 2020-21-ம் மதிப்பீட்டு ஆண்டில் (2019-20 நிதியாண்டு) இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட பல கோப்புகள் இன்னும் மதிப்பீடு செய்யாமல் நிலுவையில் இருக்கின்றன. இப்பணிகளை முடிக்க மேலும் காலம் எடுத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது.
எனவே இவற்றை சரிபார்த்தலுக்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் ெவளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கால அவகாச நீட்டிப்பு என்பது 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் சரிபார்ப்புக்கு மட்டுமே பொருந்தும். 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். அதற்குள் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதி வரை ஈட்டிய வருமானத்துக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வரித் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை.
newstm.in