பிரபல எழுத்தாளர் முகத்தில் கருப்பு மை பூசிய பெண் வழக்கறிஞர்.. வெளியான பரபரப்பு வீடியோ !

பிரபல எழுத்தாளர் முகத்தில் கருப்பு மை பூசிய பெண் வழக்கறிஞர்.. வெளியான பரபரப்பு வீடியோ !

Update: 2021-02-05 12:00 GMT

கன்னடத்தில் பிரபல எழுத்தாளராக இருந்து வருபவர் கே.எஸ்.பகவான் (75). இவர் சமீபகாலமாக இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் பேசிய இவர், ராமர் ஒரு குடிகாரர் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். 

இதுதொடர்பாக கே.எஸ்.பகவான் மீது போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் இந்து மதம் என்று எதுவும் இல்லை எனவும் இந்து மதம் அவமானகரமானது எனவும் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து இந்துக்களை அவமதித்ததாக கே.எஸ்.பகவான் மீது, வழக்கறிஞர் மீரா ராகவேந்திரா என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தப்போது, எழுத்தாளர் கே.எஸ்.பகவான் விசாரணைக்கு ஆஜராக நேரில் வந்திருந்தார். அதேபோல் வழக்கு தொடர்ந்த பெண் வழக்கறிஞர் மீரா ராகவேந்திரா, நீதிமன்ற வளாகத்தில் கே.எஸ்.பகவானிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் மறைத்து வைத்திருந்த கருப்பு மையை எடுத்து கே.எஸ்.பகவான் மீது பூசினார்.

இதனை சற்றும் எதிர்பாராத கே.எஸ்.பகவான் அதிர்ச்சி அடைந்தார். மேலும் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீரா ராகவேந்திராவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசில் கே.எஸ்.பகவான் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மீரா ராகவேந்திரா மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 341 (தவறான நோக்கத்திற்காக தடுப்பது) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பது, பொது அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.


newstm.in

Tags:    

Similar News