கடனை கொடு..இல்லைனா... அசிங்கப்படுத்திய நிதி நிறுவன ஊழியர்.. ஆத்திரத்தில் ஜீப்பை கொளுத்திய உரிமையாளர்..!

கடனை கொடு..இல்லைனா... அசிங்கப்படுத்திய நிதி நிறுவன ஊழியர்.. ஆத்திரத்தில் ஜீப்பை கொளுத்திய உரிமையாளர்..!

Update: 2022-02-01 04:45 GMT

கர்நாடக மாநிலம் கொப்பலை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரா. இவர், கொப்பல் டவுனில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து வாகனக் கடன் பெற்று ஜீப் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த ஜீப்பை பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு சுபாஷ் சந்திரா பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக சுபாஷ் சந்திராவுக்கு வருமானம் குறைந்தது. இதனால், வாகனக் கடனை அவரால் செலுத்த முடியவில்லை.
ஆனாலும், கடன் தொகையை செலுத்தும்படி தனியார் நிதி நிறுவனத்தினர் சுபாஷ் சந்திராவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று, கொப்பல் பஸ் நிலைய பகுதியில் சுபாஷ் சந்திரா ஜீப்புடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நிதி நிறுவன ஊழியர், வாகன கடனைக் கேட்டு சுபாஷ் சந்திராவுடன் தகராறு செய்ததுடன் அவதூறாக திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த சுபாஷ் சந்திரா, அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து ஜீப்பின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில், ஜீப் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து ஜீப்பில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனால் ஜீப் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுபற்றி அறிந்த கொப்பல் டவுன் போலீசார் அங்கு வந்து சுபாஷ் சந்திராவிடம் விசாரித்தனர்.

அப்போது, தனியார் நிதி நிறுவன ஊழியர் கடன் விவகாரத்தில் அவதூறாக பேசியதால் ஜீப்பை சுபாஷ் சந்திரா தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News