நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை!!
நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை!!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி 166 சவரன் அதாவது 1 கிலோ 320 கிராம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஐந்து பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆரப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் பெஸ்ட் மணி கோல்டு என்ற தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் மைக்கேல்ராஜ், ஊழியர் செல்வம் மற்றும் ஓட்டுநர் சரவணன் ஆகியோர் 50 லட்ச ரூபாய் பணம், 166 சவரன் நகையுடன் விழுப்புரத்தில் இருந்து மதுரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மேலூர் - கொட்டாம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது மற்றொரு கார் இவர்களின் கார் மீது மோதியது. தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் காரை நிறுத்தி பார்க்கும் பொழுது, மர்ம நபர்கள் கத்தியால் மேலாளர் மைக்கேல்ராஜை தலையில் தாக்கி, மற்றவர்களை விரட்டியடித்தனர்.
இதையடுத்து காரில் இருந்த 166 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் ஒரு லட்சத்துடன் ஊழியர்கள் வந்த காருடன் தப்பித்து சென்றனர். இதனையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் தங்கள் நிறுவன அதிகாரிகளிடம் தகவல் அளித்துவிட்டு, கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொட்டாம்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கொள்ளையர்கள் பறித்து சென்ற கார் கொட்டாம்பட்டி அருகே நிற்பதை அறிந்த காவல்துறையினர் காரை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள், காரில் துவரங்குறிச்சி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
newstm.in