சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள ரசாயன கிடங்கில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அங்கு வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 


மாதவரம் ரவுண்டானா பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன கிடங்கில் திடீரென தீப்பற்றியது. கரும்புகையுடன் தீ வேகமாக அருகில் நின்று கொண்டிருந்த பழைய லாரிகள் மீதும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. 

Full View

அதனைத் தொடர்ந்து 10 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரசாயனத்தில் இருந்து பரவிய தீ என்பதால் அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் ரசாயன நுரையை கொண்டு தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். 


தீ கட்டுக்கடங்காமல் எரிவதால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தீ குடியிருப்புகளுக்கு பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீயினால் கரும் புகை மூட்டம் எழுவதால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. 

newstm.in

Tags: