சாத்தூரில் வெடிவிபத்து!! மூன்று பேர் உயிரிழப்பு!!

பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. கையால் பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்த 3 பேர் உயிரிழப்பு!!

Update: 2020-02-20 15:51 GMT

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனம் ஒன்றில் பட்டாசுகளை ஏற்றும் போது உராய்வு ஏற்பட்டு, வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறுப்படுகிறது.

இந்த விபத்தில், பட்டாசுத் தொழிற்சாலையின் மற்ற அறைகளுக்கும் மளமளவென்று தீ பரவியதில் மூன்று அறைகள் தரைமட்டமானது. தீவிபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அனைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதில், பட்டாசு ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News