ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் உயிரிழப்பு..!

ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் உயிரிழப்பு..!

Update: 2022-01-14 17:29 GMT

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காளை முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (14ம் தேதி) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி அரங்கில், மாடுகள் வெளியேறும் இடத்தில் பார்வையாளராக இருந்த 18 வயதான பாலமுருகன் என்பவரது மார்பின் இடது பக்கத்தில் மாடு முட்டியது.

இதில் படுகாயமடைந்த அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தார்.

மேலும் 60 பேர் சிறிய காயங்களுடனும், 17 பேர் மேல் சிகிச்சைக்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News