முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார் !!
முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார் !!
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களின் பட்டாளம் அதிகம் .அதே நேரத்தில் வர்ணணையாளர்களை பொறுத்தும் கிரிக்கெட்டை கவனிப்பதும் உண்டு. அந்த வகையில் தமது வர்ணனையால் உலக கிரிக்கெட்டில் இந்தியாவை இடம் பெற செய்தவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் சி.கே. நாயுடு. இவரது இளைய மகளான சந்திரா நாயுடு இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர். இவர் கடந்த சில காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அவர் காலமானார்.
இந்தூரில் உள்ள அரசு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சந்திரா, ஹோல்கர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சல்வார் கமீஸ் அணிந்தபடி கிரிக்கெட் விளையாடியது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டில் கொண்ட ஆர்வத்தினால் பின்னாளில் சர்வதேச போட்டிக்கான இந்தியாவின் முதல் பெண் வர்ணனையாளரானதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இவர் தமது ஓய்வு காலத்தில் பி.சி.சி.ஐ., சி.சி.ஐ. மற்றும் மத்திய பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தமது இரங்கலையும், அஞ்சலியையும் வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.